GALLERY
நிலா ஒளியில் தகதகக்கும் ரம்யா பாண்டியன்.. வைரல் ஹாட் புகைப்படங்கள்
நிலவொளியில் ரம்யா பாண்டியன் ஜொலிக்கும் ஹாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் “டம்மி டப்பாசு” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து இவர் வெளியிட்ட “இடுப்பு” புகைப்படம் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கவைத்தது. அப்புகைப்படத்தில் இருந்து ரம்யா பாண்டியனின் லெவலே வேற லெவல் ஆனது. இணையத்தில் அவரது புகைப்படம் காட்டுத் தீ போல் பரவியது.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 1-ல் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கன்டெஸ்டண்டாக பங்குகொண்டார்.
யாரோடுடனும் கூட்டு சேராமல் தனியாக விளையாடிய அவர் இறுதி சுற்று வரை சென்றார். டைட்டில் வின்னராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து “ராமே ஆனாலும் ராவணன் ஆண்டாலும்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ரம்யா பாண்டியனை பார்த்தாலே பரவசம் தான். அதுவும் அவரது சொக்கி இழுக்கும் காதல் பார்வை நம்மை ஏதோ செய்கிறது. ரம்யா பாண்டியன் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்கவரும் ஆடையில் முதுகை காட்டியவாறு சில புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களை உசுப்பேத்தி சூடேத்த வைத்தார்.
இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் நிலவொளியில் தகதகக்கும் ஹாட் புகைப்படங்கள் சில தற்போது வைரல் ஆகி வருகிறது. அப்புகைப்படங்கள் இதோ…
