TELEVISION
கேமரா முன் பரத்திற்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த அந்த இரண்டு பேர்.. என்ன இப்படி பண்றாங்க
கேமரா முன் பரத்தை வலுக்கட்டாயமாக கட்டி பிடித்து இரண்டு பேர் மாறி மாறி முத்தம் கொடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் வைல்ட் கார்ட் ரவுண்டு நடைபெற்றது. இதில் எலிமினேட் ஆன குக்குகளான சந்தோஷ், முத்துக்குமார், கிரேஸ், ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த், ரோஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கிரேஸிற்கு கோமாளியாக பரத் வந்திருந்தார். மெயின் டாஸ்க்கில் குக்குகள் ஒரு கட்டையில் இரண்டு பழங்களை வைத்து தாங்கி பிடித்துக் கொள்ள வேண்டும் என தடங்கல் கொடுக்கப்பட்டது. கிரேஸ் கர்ணாஸ் அந்த பழங்களை தவறவிட்டதால் ஆட்ட விதிகளின் படி அறைக்குள் சென்றுவிட்டார்.
அறைக்குள் இருந்த கிரேஸிடம் அதிர்ச்சி அருணும் ரக்சனும் பரத்திடம் எதாவது கூற வேண்டுமா? என கேட்டனர். அதற்கு கிரேஸ், “ஐ லவ் யூ” என்று சொல்லிவிடு என கூறினார்.
உடனே இருவரும் பரத்திடம் சென்று அவரை கட்டிப்பிடித்து மாறி மாறி முத்தம் கொடுத்து ஐ லவ் யூ என்றனர். இதனால் அரண்டுபோனார் பரத். இச்சம்பவம் கலகலப்பான சம்பவமாக அமைந்தது.
போட்டியின் இறுதியில் சந்தோஷ், கிரேஸ், முத்துக்குமார் ஆகியோர் இறுதி சுற்று வரை சென்றனர். அதில் சந்தோஷ் சிறப்பாக சமைத்து ஐந்தாவது ஃபைனலிட்டாக தேர்வானார். அதன் பின் எதிர்பாராவிதமாக கிரேஸ் ஆறாவது ஃபைனலிட்டாக தேர்வானார்.
முத்துக்குமார் சிறப்பாக சமைத்து சில பாயிண்ட்டுகள் வேறுபாட்டால் வேறு வழியின்றி எலிமினேட் ஆனார். இந்நிலையில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் சந்தோஷ், கிரேஸ், ஸ்ருத்திகா, அம்மு அபிராமி, தர்ஷன், வித்யூலேகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் யார் வெற்றி பெற்று சீசன் 3 டைட்டிலை கைப்பற்றப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.