TELEVISION
“பாவனி எத்தன கல்யாணந்தான் பண்ணுவா?” பங்கமாய் கலாய்த்த ராஜூ…
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளிவந்துள்ள நிலையில் பாவனியை பங்கமாய் கலாய்த்த ராஜூவின் வீடியோ வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பாவனி, வொய்ல்ட் கார்டில் வீட்டிற்குள் வந்த அமீருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இருவரும் வீட்டிற்குள் காதல் புறாக்களை போல் அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் அமீர் தனக்கு நல்ல நண்பன் எனவும் அமீரை தான் காதலிக்கவில்லை எனவும் நிகழ்ச்சியினிடயே பல முறை பாவனி கூறிவந்தார்.
இதனிடையே பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு நாள் அனைவரும் தூங்கிய பிறகு பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த விஷயம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பாவனி மற்றும் அமீர் இருவருமே சிறப்பாக விளையாடி டாப் 5 வரை சென்றனர். எனினும் ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை வென்றது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 வின் புரோமோக்கள் வெளியாகி வருகின்றன. அதில் பாவனி-அமீர் ஜோடி சேர்கிறார்கள். இருவரும் நடனத்தில் பிச்சு உதறியிருக்கிறார்கள். அமீர் ஏற்கனவே நடன இயக்குனர் தான் என்பது நமக்கு தெரிந்த விஷயமே.
புரோமோவில் அமீர் பாவனியிடம் “நீங்க விரும்புன பையனை கட்டிக்காம, உங்கள விரும்புற பையனை கட்டிக்கிட்டீங்கன்னா உங்க லைஃப் நல்லா இருக்கும்” என கூற அதற்கு கம்மெண்ட் அடித்த ராஜூ “எத்தன கல்யாணம் பண்றது அப்போ” என பங்கமாய் கலாய்த்தார். ராஜூ இவ்வாறு பங்கமாய் கலாய்த்ததில் ரம்யா கிருஷ்ணன், பாவனி உட்பட விஜய் டிவி அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. இச்சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
