CINEMA
“விக்ரம்” திரைப்படத்திற்கு புரோமோட் செய்த ரஜினி! நட்புன்னா இப்படி தான் இருக்கனும்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “விக்ரம்” திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, ஆகியோரின் நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்திகான புரோமோஷன் வேலைகள் தீயாக நடந்து வருகிறது.
இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தை புரோமோட் செய்து வருகிறார். அது மட்டும் அல்லாது சமீபத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பின்னால் இருந்து தோன்றி வியப்படைய வைத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.
மேலும் கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகளுக்காக மலேசியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கமல் ஹாசன் திரைப்படத்தை புரோமோட் செய்வதற்காக கலந்து கொண்டார்.
இவ்வாறு புரோமோஷன் வேலைகளில் படு பிசியாக இருக்கும் கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். ரஜினிகாந்தை “விக்ரம்” திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
அதில் “கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் நன்றி! என்ன ஒரு நட்பு!” என புகழ்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் திரைப்படங்களுக்கு இடையே போட்டிகள் இருந்தாலும் இருவரும் சிறந்த நண்பர்கள் என்பது ஊர் அறிந்த விஷயம். ஆரம்ப காலத்தில் பல திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அந்த நட்பு இன்னும் இருவரிடமும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you @ikamalhaasan Sir! @rajinikanth Sir! What a friendship! inspiring Love you Sir’s❤️❤️❤️ pic.twitter.com/l61EuttG89
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 29, 2022