Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“அந்த 60 நிமிஷம் என் வாழ்க்கைல”..?  நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்.

CINEMA

“அந்த 60 நிமிஷம் என் வாழ்க்கைல”..?  நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற எந்த திரைப்படத்தையும் பாராட்டாமல் இருந்ததில்லை. வெறுமனே தொலைபேசியில் அழைத்து பேசுவது மட்டமல்லாமல் சம்பந்தப்பட்ட திரைத் துறையினரையே நேரில் அழைத்து பாராட்டக்கூடியவர் ரஜினிகாந்த் என்பது ஊரறிந்த விஷயமே.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த “டான்” திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியதாகவும் மேலும் கிளைமேக்ஸில் தான் அழுதுவிட்டதாகவும் கூறியதாக செய்திகள் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனை தனது இல்லத்திற்கு நேரிலேயே அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். பின்பு இருவரும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன் அதில், “இந்திய சினிமாவின் DON உடன்” என குறிப்பிட்டு அதன் பின் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்றேன். அந்த 60 நிமிடங்கள் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிமிடங்கள். தலைவர் எனக்காக அவருடைய பொன்னான நேரங்களை ஒதுக்கியதற்கும் டான் திரைப்படத்தை பாராட்டியதற்கும் மிக்க நன்றி” என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனை தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை என சினிமா வட்டாரங்களில் கூறுவது உண்டு. அதாவது அவரின் திரைப்படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து விதமான ஆடியன்ஸ்களையும் ரசிக்க வைக்கும் என ஒரு பேச்சு உண்டு.

சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படத்தில் சிறுவர்கள் ரசிக்கும்படியான காட்சிகள் பல உள்ளன என திரையரங்குகளில் படம் பார்க்க வரும் சிறுவர்கள் கூறினார்கள். மேலும் கல்லூரி வாழ்க்கையின் குஷியான தருணங்களை திரைப்படம் பதிவு செய்திருப்பதால் இளைஞர்களுக்கும் இது பெரிய டிரீட்டாக அமைந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தந்தை பாசத்தை உணர்த்தி ரசிகர்களை அழுக வைத்தது என பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading

More in CINEMA

To Top