CINEMA
சிங்கப்பூரில் ரஜினி Dance show.. வைரலாகும் வீடியோ
சிங்கப்பூரில் நடந்த ஒரு கலை விழாவில் ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
1995 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் “பாட்ஷா” திரைப்படத்தில் இடம் பெற்ற “ஆட்டோக்காரன்” பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ரஜினி காந்த் நடனம் ஆடிய முதல் கலை நிகழ்ச்சி என்றும் இது அறியப்படுகிறது.
இதில் “ஆட்டோக்காரன்” பாடலுக்கு ஆட்டோ ஓட்டுபவரின் காக்கி உடை அணிந்து அப்பாடலில் வருவது போலவே ஆடுகிறார். ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்களின் உற்சாக கரகோஷம் விண்ணை பிளக்கிறது.
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்றும் “தலைவா” என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கக்கூடியவர் ரஜினி காந்த் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. வாழ்க்கையில் முன்னேறுபவருக்கு பெரும் உதாரணமாக திகழ்பவர்களில் ஒருவர் ரஜினி காந்த்.
ஒரு பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர். மிகவும் எளிமையாக இருப்பவர். பெரும் ஆன்மீகவாதியும் கூட. இவர் அடிக்கடி செல்லும் இமயமலை பயணங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. அங்கே மக்களோடு மக்களாக கலந்து தான் ஒரு பெரிய நடிகர் என்ற அடையாளம் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆன்மீகவாதியாகவே பயணம் செய்வார்.
அவரது ஸ்டைலை பின்பற்றாதவர்கள் யாரும் இல்லை. இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதிலும் இவருக்கு கோடானு கோடி ரசிகர்கள் உண்டு. இவரது திரைப்படம் வெளிவந்தாலே திருவிழா தான். இவர் தற்போது நெல்சன் இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அரசியலில் ஈடுபாடு கொண்டு அரசியலில் காலடி எடுத்து வைக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் உடல் நிலை காரணமாக அம்முடிவு கைவிடப்பட்டது. ரஜினி காந்த் கலை நிகழ்ச்சி மேடையில் நடனம் ஆடுவது என்பது மிகவும் அரிதான விஷயம். இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூர் கலை நிகழ்ச்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனம் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.