CINEMA
நெல்சனுக்கு ரஜினி போட்ட Strict ஆர்டர்.. இனி களேபரம் தான்..
நெல்சன் மற்றும் “தலைவர் 169” திரைப்படக் குழுவினருக்கு ரஜினி ஒரு Strict ஆர்டர் போட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பீஸ்ட்” திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. “பீஸ்ட்” திரைப்படம் வெளியான போது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தோடு திரையரங்கை விட்டு வெளியே சென்றனர். எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்த வண்ணம் இருந்தன.
இதனை தொடர்ந்து “பீஸ்ட்” திரைப்படத்தின் இயக்குனர் நெல்சனை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். பலரும் “நெல்சன் விஜய்யை வைத்து செய்துவிட்டார்” என பல மீம்களை வெளியிட்டு வந்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
சமீபத்தில் கூட ஒரு சமூக ஊடக தொலைக்காட்சியின் விழாவில் பேசிய நெல்சன், “ஏற்கனவே நான் செம்மய்யா மாட்டிருக்கேன்” என கூறியதில் இருந்து அவர் மனதை எந்த அளவுக்கு அந்த மீம்கள் காயப்படுத்தி இருக்கும் என்பதை அறிய முடிந்தது.
இதனிடையே நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169 ஆவது திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளி வந்தது. இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
மேலும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை பலப்படுத்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதை உருவாக்கத்தில் இயக்குனர் நெல்சனுடன் இணைந்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.
இந்நிலையில் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு ஒரு Strict ஆன கண்டிசனை போட்டுள்ளாராம். அதாவது வருகிற ஆகஸ்து மாதம் “தலைவர் 169” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் திரைப்படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் அனைவரும் 3 மாதங்களுக்குள் எப்போது அழைத்தாலும் நடித்து கொடுக்க வேண்டுமாம். மூன்று மாதம் வேறு எந்த திரைப்படங்களுக்கும் கால் ஷீட் கொடுக்க கூடாது என கராராக கூறி விட்டாராம். இவ்வாறு இணையத்தில் ஒரு தகவல் கசிந்து வருகிறது.