HOLLYWOOD
ஹாலிவுட்டில் ஒலித்த ரஜினி பாடல்; வைரல் வீடியோ
மிஸ். மார்வெல் வெப் சீரீஸில் ரஜினி திரைப்பட பாடல் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளது.
மார்வெல் தயாரிப்பு நிறுவனம் சமீப காலமாக தொடர்ந்து பல சூப்பர் ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்; தி மல்டி வெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம் வெளிவந்து உலகளவில் மாஸ் காட்டியது.
அதே போல் “வாண்டா விஷன்”, “லோகி” போன்ற வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் “மிஸ். மார்வெல்” என்ற வெப் சீரீஸ் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இதில் சூப்பர் ஹீரோ ஒரு பெண் என்பதும் அப்பெண் கதாப்பாத்திரம் தெற்காசியாவை சேர்ந்த முஸ்லிம் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம் என்பதும் தெரிய வந்தது.
இதுவரை தெற்காசியாவை சேர்ந்த எந்த சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்தையும் மார்வெல் நிறுவனம் உருவாக்கவில்லை. அதுவும் முஸ்லீம் மதத்தை சேர்ந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கவில்லை. கருப்பினத்தவர்களில் பல சூப்பர் ஹீரோக்கள் வலம் வந்தாலும் முஸ்லீம் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம் என்பது ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் “மிஸ். மார்வெல்” வெப் சீரீஸ் முதல் எபிசோட் கடந்த 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்தது.
அதில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தின் பாடல் ஒன்று ஒலிக்கிறது. அதாவது மிஸ். மார்வெல் டைட்டில் போடும்போதே அப்பாடல் ஒலிக்கிறது.
Linga film “Oh Nanba” song featured in Ms. Marvel title card. 🌸@arrahman musical brand 🔥🔥🥵#ARRahman @rajinikanth pic.twitter.com/SDXOjHCsph
— A.R.Rahman Fans (@ARRahmanFCtwt) June 8, 2022
அப்பாடல் “லிங்கா” திரைப்படத்தின் “ஓ நண்பா” பாடல் ஆகும். இப்பாடலுக்கு இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான். இப்பாடலை பாடியவர் மறைந்த பிண்ணனி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.