CINEMA
ரஜினி, கமல், தமிழக முதல்வர்… இப்படி எல்லாரும் இந்த விழாவில் கலந்துக்கப் போறாங்க…?
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த ஒரு சுவாரசியமான அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.
“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்தது. டிரைலருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதே போல் சமீபத்தில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் வெளிவந்தது. இப்பாடல் பரவலாக பலராலும் ரசிக்கப்பட்டது. ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 5 மொழிகளிலும் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கம் போல் “ஏ ஆர் ரகுமானின் இசை ஒரு Slow Poison” என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்தான ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் அந்த விழாவில் “பொன்னியின் செல்வன்” படக்குழுவினர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல் ஹாசன், மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
