TELEVISION
ராதிகாவின் முன்னாள் கணவனை புறட்டி எடுத்த கோபி; இனி என்ன ஆகப்போகுதோ?
பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கும் ராதிகாவுக்கும் நடுவில் தற்போது ராதிகாவின் முன்னாள் கணவர் வந்துள்ளதால் இனி கதையில் பல டிவிஸ்ட்டுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்யலட்சுமி தொடரில் கோபி பாக்யாவை கலட்டிவிட்டு எப்படியாவது தனது கல்லூரி தோழியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என துடியாய் துடிக்கிறார். ஆனால் சமீபத்தில் கோபியிடம் “உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தை நான் பார்க்க வேண்டும்” என ராதிகா கூற அதற்கு கோபி மழுப்பி கொண்டே வந்தார்.
ஆனால் ராதிகா விடவில்லை. கோபியிடம் அவருடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என வற்புறுத்திக் கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து குடி போதையில் ராதிகாவிடம் பாக்யலட்சுமியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை காட்டி, பாக்யா தான் தன்னுடைய மனைவி என கோபி உளறி விட்டார்.
இதனை பார்த்த ராதிகா ஷாக் ஆகி தள்ளாடி விழுந்தார். ஏற்கனவே ராதிகாவிற்கு பாக்யாவை நன்றாக தெரியும். கோபி இப்படி நம்மை ஏமாற்றிவிட்டாரே என ராதிகா கோபப்பட்டார். இனிமேல் வீட்டிற்கு வரவேண்டாம் என கோபியை Avoid செய்து கொண்டே இருந்தார் ராதிகா.
அதே போல் போதையில் தூக்கத்தில் இருந்த போது பாக்யாவிடம் தான் ஒரு பெண்ணிடம் பழகுவதாக உளறிவிட்டார். இதை கேட்ட பாக்யாவின் நெஞ்சம் வெடித்தது. ஆனால் பாக்யாவிற்கு கோபி காதலிக்கும் பெண் ராதிகா தான் என தெரியாது.
தனது தோழி பாக்யாவின் வாழ்க்கையை தான் கெடுத்து விடக்கூடாது என்பதற்காக கோபியை ராதிகா வெறுத்து கொண்டே வந்தார். கோபியும் விடாமல் ராதிகாவின் வீட்டிற்கு வந்து கொண்டே இருந்தார். சமீபத்தில் வெளிவந்த புரோமோவில் ராதிகாவின் முன்னாள் கணவருடன் பிறந்த மகளுக்கு பிடித்த பொருளை பரிசாக வழங்கினார் கோபி.
அதனை பார்த்த ராதிகா அந்த பொருளை தட்டிவிட்டு வெளியே போகும்படி கத்தினார். இதனை அந்த பக்கமாக போவனர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது அங்கே வந்த ராதிகாவின் முன்னாள் கணவர், கோபியிடம் வம்பிழுக்க இருவரும் அடிதடி சண்டையில் ஈடுபட்டனர்.
அதன் பின் ராதிகாவிடம் கோபமாக “என்னை குடிகாரன் என துரத்தி விட்டாய். இப்போது கோபியை துரத்தி விடுகிறாய். இதன் பின் யாருடன் சேர்ந்து ஊர் சுற்றப் போகிறாய்” என அங்கே நின்றுக் கொண்டிருந்தவர்களின் காதுகளில் படுமாறு முன்னாள் கணவன் பேசுகிறார். ராதிகா கையறு நிலையில் நிற்கிறார்.