CINEMA
“தமன்னாவிடம் அது இல்லவே இல்லை”.. ராதா ரவி சர்ச்சை பேச்சு
தமன்னாவை குறித்து நடிகர் ராதா ரவி சமீபத்தில் விழா ஒன்றில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
ராதா ரவி தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ஆவார். இவர் வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என பல வேடங்களில் மிகவும் கச்சிதமாக நடிக்க கூடியவர். இந்நிலையில் சமீபத்தில் “கனல்” என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ராதா ரவி பேசினார்.
அப்போது அத்திரைப்படத்தின் ஹீரோயினை குறித்து பேசும்போது “ சமீபத்தில் தமன்னாவை பார்த்து பயந்து விட்டேன். நானும் அவரை சுற்றி சுற்றி பார்த்தேன். ஒரு இடத்தில் கூட கருப்பாக இல்லை. அவ்வளவு வெள்ளை” என கூறிவிட்டு அதன் பின் அத்திரைப்படத்தின் கதாநாயகியை குறிப்பிட்டு “தமன்னாவை போல் இந்த பெண்ணும் செக்க செவேல் என வந்தார். கிளாமராக நடித்திருப்பார் என நினைத்தேன். ஆனால் இத்திரைப்படத்தில் காவியத் தலைவி போல் நடித்திருக்கிறார்” என கூறினார்.
ராதா ரவியின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராதா ரவி இதற்கு முன் பலரை குறித்தும் எடக்கு மடக்காக பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். நயன்தாரா குறித்தும் கூட ஒரு முறை சர்ச்சையாக பேசினார். அதன் பின் தற்போது தமன்னா குறித்து பேசியது ரசிகர்களிடம் கோபத்தை உண்டாக்கி உள்ளது.
கோலிவுட் டோலிவுட் என பல மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக தமன்னா திகழ்ந்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் தமன்னா நடித்துள்ளார்.
சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்த “நவம்பர் ஸ்டோரி” என்ற வெப் சீரீஸ் அனைவராலும் ரசிக்கப்பட்டது. தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன்” போலோ ஷங்கர்” என்ற திரைப்படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.
