CINEMA
அருணாச்சலம் ரஜினி போல் மாஸ் காட்டும் விஜய் டிவி புகழ்.. ஆள் அடையாளமே தெரியல..
அருணாச்சலம் ரஜினிகாந்த் போல் மாஸ் காட்டும் “குக் வித் கோமாளி” புகழின் வைரல் வீடியோ இதோ.
விஜய் தொலைக்காட்சியின் மூலம் புகழ்பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோரை தொடர்ந்து அவர்களின் வரிசையில் தற்போது நிற்பது புகழ். தன் ஆரம்ப காலத்தில் மிகவும் போராடி விஜய் தொலைக்காட்சியில் நுழைந்த இவர் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார். அதன் பின் புகழின் புகழ் உச்சத்தை தொட்டது.
இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதனை தொடர்ந்து புகழ் “சிக்சர்”, “சபாபதி”, “என்ன சொல்ல போகிறாய், “வலிமை”, “வீட்ல விஷேசம்”, “யானை”, “காசேதான் கடவுளடா”, “யானை” என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. தொடர்ந்து போராடினால் வெற்றியை நிச்சயமாக அடையலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு புகழ் தான். அந்த அளவுக்கு மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார்.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது புகழ் தற்போது “குதூகலம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் வித்தியாசமான கெட் அப்பில் புகழ் தென்படுகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அருணாச்சலம் ரஜினிகாந்த் போல் புகழ் நடந்துகொள்கிறார். அந்த வீடியோவின் பின்னே “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” என்ற பாடல் ஒலிக்கிறது. இது மிகவும் கலகலப்பான வீடியோவாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் கம்மென்ட் பகுதியில் “மாஸ் புகழ்”, “தலைவா வேற லெவல்” என கூறிவருகின்றனர்.
View this post on Instagram
