Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஆடித்திருநாளை வந்தியதேவனுடன் கொண்டாடுவோம்.. பொன்னியின் செல்வன் மாஸ் அப்டேட்

CINEMA

ஆடித்திருநாளை வந்தியதேவனுடன் கொண்டாடுவோம்.. பொன்னியின் செல்வன் மாஸ் அப்டேட்

ஆடித்திருநாளை முன்னிட்டு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளிவர உள்ளது.

மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் சிங்கிள் பாடல் குறித்தான ஒரு புது அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது வருகிற 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” என்ற பாடல் வெளிவர உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசையில் இப்பாடல் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கார்த்தி இடம்பெறப் போகிறார் என தெரிய வருகிறது.

இப்பாடல் வெளியீட்டை அறிவிக்கும் விதமாக ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கார்த்தி வந்தியத்தேவனாக குதிரையில் பயணம் செய்வது போல் தென்படுகிறார். மேலும் அப்போஸ்டரில் “வந்தியத்தேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

“பொன்னியின் செல்வன்” நாவலில் ஆடிப்பெருக்கில் தான் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தின் அறிமுகம் இருக்கும். ஆடி வெள்ளம் போகையில் ஆற்றின் கரையில் குதிரையை செலுத்திக்கொண்டு போவார் வந்தியத்தேவன். இதனை வைத்து பார்க்கும்போது இது கார்த்தியின் அறிமுகப் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் வெளியானது. பேன் இந்திய திரைப்படம் என்பதால் இணையத்தில் சோழர்கள் குறித்த விவாதம் எழுந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சிங்கிள் வெளியாக உள்ள செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top