CINEMA
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் Second Single.. தெறி லுக்கில் விக்ரம்
“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஐந்து மொழிகளிலும் இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கம் போல் “ஏ ஆர் ரகுமானின் இசை ஒரு Slow Poison” என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. “சோழா சோழா” என தொடங்கும் இப்பாடல் வருகிற 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “பொன்னி நதி” பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. மேலும் இது ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் இடம்பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
A victory celebration! ✨💥#CholaChola the next single from #PS1 🗡 releasing on August 19th at 6PM!
🎶 @arrahman
🎤 @dsathyaprakash, #VMMahalingam, @NakulAbhyankar
✒️ @ilangokrishnan #PonniyinSelvan#ManiRatnam @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/lbPCDp7IGQ— Lyca Productions (@LycaProductions) August 17, 2022
“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
