CINEMA
மஹாலட்சுமி மாதிரிலாம் இல்ல.. மஹாலட்சுமி தான் மனைவியே… குஷியில் பிரபல தயாரிப்பாளர்..
லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் சீரீயல் நடிகை மஹாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.
லிப்ரா புரொடக்சன்ஸ் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகரனை பலருக்கும் தெரிந்திருக்கும். “சுட்டக்கதை”, “நட்புன்னா என்ன தெரியுமா?”, “முருங்கக்காய் சிப்ஸ்” போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவர் பிரபல யூட்யூப் வலைத்தளம் ஒன்றில் பிக் பாஸ் ரிவ்யூ அளித்து வந்தார். அது பலருக்கும் ரீச் ஆனது. அதன் மூலம் தான் இவர் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார்.
தன் மனதில் பட்டத்தை Bold ஆக சொல்லும் பழக்கம் உள்ளதால் இவருக்கு பல நெகட்டிவிட்டிகள் வந்து சேர்ந்தன. இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “என்ஜாய் பண்ணு லைஃப், Soon will be with my wife” என குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து ரவீந்தர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என தெரியவந்தது. எனினும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் திடீரென தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை நம்மால் மறந்திருக்க முடியாது. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்த போதே பலரையும் கவர்ந்தவர் மகாலட்சுமி. அவர் “அரசி”, “வாணி ராணி”, “பொண்ணுக்கு தங்க மனசு” போன்ற பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ரவீந்தர் சந்திரசேகரனும் மகாலட்சுமியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நேற்று இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றுள்ளது. இப்புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ரவீந்தர் “மஹாலட்சுமி போல பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும் ன்னு சொல்லுவாங்க. ஆனா அந்த மஹாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சா” என குறிப்பிட்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு சினிமாத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
