Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இனி பிரியங்கா மோகன் ரேஞ்சே வேற..

CINEMA

இனி பிரியங்கா மோகன் ரேஞ்சே வேற..

பிரியங்கா மோகன் தமிழின் முன்னணி நடிகருடன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகில் “ஓந்த் கதே ஹெல்லா” என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் பிரியங்கா மோகன். எனினும் தெலுங்கில் வெளிவந்த நானி நடிப்பில் உருவான “நானீஸ் கேங்க் லீடர்” என்ற திரைப்படம் மூலம் தான் தென்னிந்திய சினிமா உலகிற்கு பரிச்சயமானார்.

அதனை தொடர்ந்து “ஸ்ரீகரம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் தான் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டாக்டர்” திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். அதில் “மெலுகு டால்” ஆக வந்து இளைஞர்களின் மனதை கவ்விக் கொண்டு போனார். அவரின் சிரிப்பும் கொஞ்சலான பேச்சும் மனதை பரவசப்படுத்தியது.

அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவான “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்தார். அதில் “சும்மா சுர்ர்” ன்னு பாடலில் சும்மா சுர்ருன்னு என்று சொல்லும் போது நமது இதயமே சுர்ர்ரென இழுத்தது.

அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படத்தில் நடித்தார். அதில் கல்லூரி மாணவியாக க்யூட்டாக வந்து நமது மனசை கொக்கி போட்டு இழுத்து கொண்டு போனார். மேலும் சென்ற வாரம் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் வந்து நம் கண்களை கொள்ளை கொண்டு போனார்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா மோகன் தமிழின் முன்னணி நடிகருடன் புதிய படத்தில் ஜோடி சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன. மேலும் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “தலைவர் 169” திரைப்படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க இருக்குறார் எனவும் சமீபத்தில் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எடுப்பட்டது. ஆனால் அதன் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை.

Continue Reading

More in CINEMA

To Top