Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஜிகு ஜிகு உடையில் ப்ரியா பவானி ஷங்கர்”… சும்மா அள்ளு விடுது..

GALLERY

“ஜிகு ஜிகு உடையில் ப்ரியா பவானி ஷங்கர்”… சும்மா அள்ளு விடுது..

ப்ரியா பவானி ஷங்கர் ஜிகு ஜிகு உடையில் இணைய வாசிகளின் கண்களை கொள்ளை அடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ப்ரியா பவானி ஷங்கர் பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே அவருக்கு ரசிகர்கள் குவிந்து கிடந்தனர். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு பிரபலமான தொடரில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளை அடித்தார்.

அதன் பின்பு “மேயாத மான்” என்ற திரைப்படம் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதன் பின்பு “கடைக்குட்டி சிங்கம்”, “மாஃபியா’ என பல திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பின் அவருக்கு ஏறுமுகம் தான்.

தமிழில் தற்போது பிசியான கதாநாயகியாக திகழும் ப்ரியா பவானி ஷங்கர் இப்போது பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார். குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “இந்தியன் 2” திரைப்படத்திலும் அவர் இடம்பெற்றார்.

சமீபத்தில் அவர் நடித்த “ஹாஸ்டல்” என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. மேலும் “குருதி ஆட்டம்” “பொம்மை” “ருத்ரன்” “யானை” போன்ற திரைப்படங்கள் வெளியாவதற்கு தயாரான நிலையில் உள்ளது. அதே போல் “பத்து தல” “திருச்சிற்றம்பலம்” போன்ற திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் தனது படங்களில் ஹோம்லியான லுக்கில் ஜொலிக்கும் ப்ரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் திரை தீப்பிடிக்கும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “நம்ம ப்ரியாவா இது?” என பார்ப்பவர்கள் வாயில் கை வைக்கும் அளவுக்கு மார்டன் கேர்ளாக காட்சி தருகிறார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல நாட்களாக தீயாக பரவி வந்து கொண்டிருக்கிறது.

Continue Reading

More in GALLERY

To Top