CINEMA
“டிமான்டி காலனி” திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கரா? இது புதுசா இருக்கே..
“டிமான்டி காலனி 2” திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் எழுகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் “டிமான்டி காலனி”. இதில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர், சிங்கம் புலி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.
தமிழின் மிக முக்கியமான ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக அமைந்த திரைப்படம் டிமான்டி காலனி. யாரும் எதிர்பாராவிதமாக சைலண்ட்டாக வெளிவந்து பட்டையை கிளப்பியது இத்திரைப்படம்.
இத்திரைப்படம் வெளிவந்த பிறகு இன்னமும் கூட சென்னையின் டிமான்டி காலனியில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் பேய் இருப்பதாக பலரும் அந்த பகுதிக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். அந்தளவுக்கு இந்த திரைப்படம் வெகு மக்களை கவர்ந்தது.
“டிமான்டி காலனி” திரைப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அத்திரைப்படத்தை தொடர்ந்து “இமைக்கா நொடிகள்” என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பின் சீயான் விக்ரம் நடிப்பில் “கோப்ரா” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் சீயான் விகர்மிற்கு ஜோடியாக கே ஜி எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது “டிமாண்டி காலணி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் பிரியா பவானி ஷங்கரை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். இதிலும் அருள்நிதி தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். ஆனால் இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவில்லையாம்.
