Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பிரேமம் இயக்குனருடன் நயன்தாரா இணையும் திரைப்படத்தின் New Update!!

CINEMA

பிரேமம் இயக்குனருடன் நயன்தாரா இணையும் திரைப்படத்தின் New Update!!

பிரேமம் இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “பிரேமம்” திரைப்படத்தை நம்மால் மறக்க முடியாது. நமது பள்ளி நினைவேக்கங்களை மீண்டும் கிளறி விடும் திரைப்படமாக “பிரேமம்” அமைந்தது.

நிவின் பாலி, மடோன்னா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி ஆகிய பலரின் யதார்த்தமான மற்றும் அழகான நடிப்பால் தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்தனர். அதன் பிறகு சாய் பல்லவி, அனுபமா, மடோன்னா ஆகிய மூவருக்கும் ஏறுமுகம் தான்.

குறிப்பாக தமிழ் நாட்டில் இவர்களுக்கு பெரிய Fan base அமைந்தது. இந்நிலையில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கி 7 வருடங்கள் கழித்து வெளியாகவுள்ள திரைப்படம் “கோல்டு”. இத்திரைப்படத்தில் நயன்தாரா, பிரித்விராஜ், அஜ்மல், ரோஷன்  மேத்யூ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இத்திரைப்படத்தின் வித்தியாசமான போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

அல்ஃபோன்ஸ் புத்திரன் “பிரேமம்” திரைப்படத்திற்கு பிறகு அவரது அடுத்த திரைப்படம் எப்போது வெளிவரும் என அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அல்ஃபோன்ஸ் புத்திரன் ஃபகத் ஃபாசில், நயன்தாரா ஆகியோரை வைத்து “பாட்டு” என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

நயன்தாரா தற்போது பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் “O2” திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் அட்லி, ஷாருக் கானை வைத்து இயக்கும் “ஜவான்” திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது “கோல்டு”, “பாட்டு” என அவரது Line Up தொடர்கிறது. மேலும் வருகிற ஜூன் 9 ஆம் தேதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Alphonse Puthren (@puthrenalphonse)

Continue Reading

More in CINEMA

To Top