CINEMA
“வின்னர்” பார்ட் 2 வரப்போகுது.. கைப்பிள்ள is Back..?
“வின்னர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஒரு முக்கிய தகவலை பிரசாந்த் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு பிரசாந்த், வடிவேலு, கிரண் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வின்னர்”. “வின்னர்” என்ற பெயரை கேட்டாலே நமக்கு நியாபகம் வருவது வடிவேலுவின் கைப்பிள்ள கதாப்பாத்திரம் தான்.
“வின்னர்” திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வடிவேலுவின் காமெடி காட்சிகள் சிரிப்பலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இத்திரைப்படம் ஹிட் ஆனதற்கு முக்கிய காரணமே வடிவேலுதான் என கூறுவார்கள்.
“வின்னர்” திரைப்படத்தில் வடிவேலு வைத்திருக்கும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பெயர் இன்றளவும் பிரபலமான பெயர். அந்த பெயரை பயன்படுத்தி சிவகார்த்திகேயன் படமே ஹிட் ஆகியிருக்கிறது. “கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல”, “ஒரு பேங்க் ஒன்னு கட்டிவிடுங்க நடத்துரோம்” “ஹலோ, நான் வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்பிள்ள பேசுறேன், யார் பேசுறது” போன்ற பல வசனங்கள் இன்றளவும் சமூக வலைத்தளத்தில் மீம் மெட்டிரியலாக வலம் வருகிறது.
இந்நிலையில் “வின்னர்” இரண்டாம் பாகம் குறித்தான பேச்சுக்கள் சில நாட்களாகவே இருந்து வந்தன. இதனை தொடர்ந்து தற்போது பிரசாந்த் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய போன பிரசாந்த், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வின்னர் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் விரைவில் அந்தகன் திரைப்படம் வெளிவரும் எனவும் கூறியுள்ளார்.
எனினும் “வின்னர்” இரண்டாம் பாகத்தில் வடிவேலு இடம்பெறுவாரா மாட்டாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.