CINEMA
“கரு முதல் பிரசவம் வரை”… நடிகை பிரனிதா வெளியிட்ட டெலிவரி வீடியோ
நடிகை பிரனிதா தனக்கு கரு உருவானது முதல் குழந்தை டெலிவரி வரையிலான வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
கன்னட நடிகையான பிரனிதா “பொர்க்கி” என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின் தெலுங்கு திரைப்படங்கள் சிலவற்றில் நடித்த பிரனிதா தமிழ் திரை உலகிற்கு அருள்நிதி ஹீரோவாக நடித்த “உதயன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் கார்த்தி நடித்த “சகுனி”, சூர்யா நடித்த “மாஸ்”, ஜெய் நடித்த “எனக்கு வாய்த்த அடிமைகள்”, அதர்வா நடித்த “ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்” போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக ஜொலித்தார்.
இதனிடையே கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜூ என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
சமீப காலமாக கர்ப்பமாக இருந்த அவருக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படங்கள் பலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் கர்ப்பமானது முதல் குழந்தை பிறந்தது வரைக்கும் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரனிதா பகிர்ந்துள்ளார். அதில் மெடிக்கல் செக் அப் செய்தது, வயிற்றில் குழந்தை அசைவது, பிரசவ வார்டில் அட்மிட் ஆனது, குழந்தை பிறப்பு என பல வீடியோக்களை இணைத்து ஒரே வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவின் கமென்ட் பகுதியில் பலரும் பிரனிதாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ….
View this post on Instagram