GOSSIPS
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் இருந்த பாடகரின் குரல் ஒடுக்கப்பட்டதா?
பல பாடல்கள் பாடியிருந்தாலும் அந்த ஒரு பாடலால் டாப்க்கு போன பாடகரை சினிமாத்துறையினர் ஒதுக்கியதால் தான் அப்படியாம்..
தனது தனித்துவ திறமையால் அனைவரையும் ரசிக்க வைத்த அந்த பாடகர், சமீபத்தில் வெளிவந்த அந்த ஒற்றை பாடலின் மூலம் டாப்க்கு போனார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பிரச்சனைகளே வந்தது.
அதாவது அவரை தவிர்த்து அந்த பாடலில் இடம்பெற்ற மற்றவரின் புகைப்படம் ஏகபோகமாக கொண்டாடப்பட்டதால் ஆரம்பமானது அந்த பிரச்சனை. அதனை தொடர்ந்து உள்ளுக்குள் அனலாய் தகித்துக் கொண்டிருந்தாலும் வெளியே எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார் அந்த பாடகர்.
ஆனால் சமீபத்தில் நடந்த அந்த பிரம்மாண்ட விழாவில் தான் புறக்கணிக்கப்பட்டதாய் எண்ணி எரிமலையாய் வெடித்தார். இது பெரும் விவாதங்களை எழுப்பியது. ஆனால் இந்த எரிமலை வெடிப்பிற்கு பின் மற்றொரு காரணமும் இருப்பதாக கூறுகிறார்கள்.
அதாவது அந்த பாடகருக்கு முதலில் இருந்தே யாரும் அவ்வளவாக வாய்ப்புகள் அளிக்கவில்லையாம். எனினும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் வாய்ப்பளித்தாலும் சிறு சிறு வாய்ப்புகளே அளித்தனராம். ஆதலால் இசைத்துறை தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற ஏக்கத்தில் தான் அப்படி எரிமலையாய் வெடித்தாராம்.
வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை என்றாலும் மக்களின் மனதில் பதிந்து விட்டார் அந்த பாடகர். ஆனால் அதுவே போதும் என்று இருந்துவிடாமல் வேற லெவலுக்கு முன்னேற வேண்டும் எனவும், முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடவேண்டும் என்ற குறிக்கோளிலும் இருக்கிறாராம் அந்த பாடகர். ஆதலால் தான் தற்போது எரிமலையாய் வெடித்திருக்கிறார்.
“நல்ல திறமை இருந்தும் இப்படி ஒதுக்குகிறார்களே, பாவம்” என அந்த பாடகரை பற்றி கோலிவுட் வட்டாரங்களில் பலரும் கிசுகிசுக்கச் செய்கின்றனராம்.