CINEMA
விஜய் பட ஷூட்டிங்கில் பூஜா செய்த குறும்புத்தனங்கள்.. க்யூட் வைரல் வீடியோ..
“பீஸ்ட்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் செய்த க்யூட்டான குறும்புத்தனங்களின் வீடியோ ஒன்றை பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பேன் இந்தியா கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவிற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரின் சிக்கென்ற உடல் அமைப்பு இளசுகளின் மனசை தள்ளாட வைப்பவை. அவரின் பார்வை ஆயிரம் மின்னல் வந்து அடித்தது போல் இருக்கும் என ரசிகர்கள் கூறுவார்கள். தனது சிரிப்பால் பலரையும் மயக்கி அப்படியே அவர் பின்னே செல்ல வைப்பவர் என்றும் கூறுகிறார்கள்.
அவர் வெளியிடும் டாப் கிளாமர் புகைப்படங்களை பார்த்து மயங்கி விழுந்தோர் பலர். அவர் உடலின் வனப்பை பார்த்து பல இளைஞர்கள் திக்கு முக்காடி போயினர். அவரின் பொன்னிற மேனி பலரையும் மௌனமாக்கி அவரின் பின்னே செல்ல வைத்து விடுகிறது. இவ்வாறு க்யூட்னெஸ்ஸுக்கு பெயர் போன பூஜா ஹெக்டே தற்போது க்யூட்டாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் “பீஸ்ட்”. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. எனினும் அனிருத் இசையில் ஆல் ஓவர் வேர்ல்டு கலக்கியது இதில் இடம்பெற்ற “அரபி குத்து” பாடல். இந்த பாடலில் பூஜா ஹெக்டே தனது பொன்னிற மேனியை காட்டி பலரையும் கவுத்து போட்டார்.
இந்த நிலையில் தற்போது அவர் படப்பிடிப்புத் தளத்தில் க்யூட்னெஸ்ஸாக செய்த சேட்டைகளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பூஜா ஹெக்டே அழகு பதுமையாக தென்படுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Have you ever met a brain doodler? 🫠🙋🏻♀️ #brb #restless #waitingforaction pic.twitter.com/Pj9AUCcvDE
— Pooja Hegde (@hegdepooja) August 21, 2022
