GOSSIPS
பிரம்மாண்ட படத்தின் விழாவுக்கு இதனால தான் அந்த நடிகர் வரலயாம்?
பிரம்மாண்ட படத்தின் விழாவுக்கு அந்த “பூச்சி” நடிகர் வராததற்கு இது தான் காரணமாம்.
தமிழ் சினிமா உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அந்த பிரம்மாண்ட திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படக்குழுவினர் தயார் செய்த விழா கூட சமீபத்தில் நடந்தது.
ஆனால் அந்த நாளில் அந்த “பூச்சி” நடிகர் தனக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டதாக கூறி அந்த விழாவிற்கு போகவில்லை. அவருக்கு பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லை, அவர் போகாததற்கு காரணமே வேறு என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
அதாவது அந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் அந்த “பூச்சி” நடிகருக்கு சரியான ஸ்பேஸ் இல்லையாம். இன்னொரு நடிகருக்கு தான் அதிக ஸ்பேஸாம். ஆதலால் தான் வேண்டும் என்றே அந்த விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று பிளான் செய்து தனக்கு ஒரு பிரச்சனை என்று கழண்டுவிட்டாராம்.
படத்தின் முக்கிய கதாப்பாத்திரமே அவர் தான் எனும் போது அவருக்கான ஸ்பேஸ் தரவில்லை என்று அவருக்கு ஈகோ வந்துவிட்டதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதனால் விழாவில் கலந்து கொள்ளவில்லையாம்.
அந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். அதனால் எல்லாருக்கும் ஸ்பேஸ் கொடுக்க வேண்டும் என இயக்குனர் முடிவெடுத்தாராம். ஆனால் “பூச்சி” நடிகர் நடித்த கதாப்பாத்திரம் வெகு சில காட்சிகளே தான் வருகிறதாம். அந்த படத்தில் நடித்த மற்ற கதாப்பாத்திரங்களுக்கு அதிக ஸ்பேஸ் கொடுத்து விட்டு தனக்கு மட்டும் கொடுக்கவில்லை என “பூச்சி” நடிகர் கடுப்பாகினாராம். ஆதலால் தான் இனி இந்த படம் குறித்த எந்த விழாவிலும் கலந்து கொள்ளக் கூடாது என முடிவெடுத்துள்ளாராம். இவ்வாறு “பூச்சி” நடிகரை பற்றி கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
