CINEMA
பொன்னியின் செல்வன் வெளியிடப்போவது இவர் தான்??
“பொன்னியின் செல்வன்” டீசரை வெளியிடப்போவது யார் தெரியுமா?
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தை குறித்தான அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகிய பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வெகு நாட்களாக “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்தான எந்த அப்டேட்டுகளும் வெளிவராததால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். தற்போது அவர்களை குஷிப்படுத்தும் வகையில் தினமும் ஒரு அப்டேட் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன் சீயான் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளிவந்தது. அதனை தொடர்ந்து கார்த்தி ஏற்று நடித்த வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளிவந்து வைரல் ஆனது. வந்தியதேவன் கதாப்பாத்திரம் தான் நாவலின் கதாநாயகன். நாவல் முழுக்க பயணிக்கும் கதாப்பாத்திரமும் அவர் தான்.
அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த நந்தினி கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளிவந்து கிளுகிளுப்பு ஊட்டியது. நேற்று த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாப்பாத்திரத்தின் மினுமினுக்கும் போஸ்டர் வெளிவந்து வைரல் ஆனது.
இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டீசர் வருகிற 8 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு தமிழின் முன்னணி நடிகர் ஒருவர் “பொன்னியின் செல்வன்” டீசரை வெளியிடப்போகிறார்.
ஆம்! இன்று மாலை 6 மணிக்கு “பொன்னியின் செல்வன்” டீசரை நடிகர் சூர்யா வெளியிடப்போகிறார். இதனால் ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.
Thank You, Suriya Sir! @Suriya_offl#PS1🗡️ @madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman @Tipsofficial @TipsRegional #TipsTamil pic.twitter.com/dJOVUURPeC
— Lyca Productions (@LycaProductions) July 7, 2022
