CINEMA
“ரசிகர்களை ஏமாற்றிய மணிரத்னம்”.. என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்து சோகத்தை ஏற்படுத்தக் கூடிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் எம். ஜி.ஆர் போன்ற பல ஜாம்பவான்கள் தொட்டும் நடக்காத ஒன்று என்றால் அது “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படம் ஆக்குவது தான். “பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்க முடியாது எனவும் அதனை யார் தொட்டாலும் தோல்வி உறுதி எனவும் ஒரு வதந்தி தமிழ் சினிமா உலகில் பரவி வந்தது.
ஆனால் அதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து எறிந்து விட்டார் இயக்குனர் மணி ரத்னம். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து தற்போது முதல் பாகத்தை வெளியிடுவதற்கான இறுதி கட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார், விக்ரம், விக்ரம் பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
கார்த்தி நாவலின் முக்கிய கதாப்பாத்திரமான வந்தியதேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும் த்ரிஷா குந்தவையாகவும் வருகிறார்கள்.
இதனிடையே “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம் ஏற்று நடிக்கும் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் ஸ்டில் ஒன்று இணையத்தில் கசிந்தது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா வருகிற ஜூலை மாதம் 7 ஆம் தேதி தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது இத்திரைபடத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் டீசர் வெளியீடு தள்ளிப் போய் உள்ளது செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாத இறுதியில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
