Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“வருகிறான் சோழன்”.. பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ

CINEMA

“வருகிறான் சோழன்”.. பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணி ரத்னம் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக இயக்க போகிறார் என அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து அத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, ஆகிய பலரும் நடிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வந்தது.

அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தது. ஆனால் கொரோனாவால் பாதியிலேயே படப்பிடிப்பு நின்றது. இதனை தொடர்ந்து சென்ற வருடம் மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்தது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டிரைலர் ஜூலை மாதம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து வெளியிடப்போவதாக சில தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் சில நேரங்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் வெளியீடு குறித்தான ஒரு அறிவிப்பு வீடியோ வெளிவந்துள்ளது. அதில் சிலர் சோழர் கொடியை பிடித்துக் கொண்டிருக்க “சோழன் வருகிறான்” என்று தோன்றுகிறது. பின்னணியில் ஏ. ஆர். ரகுமானிந் பேக் கிரவுண்ட் ஸ்கோர் பயங்கரமாக ஒலிக்கிறது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இத்திரைப்படத்தில் கார்த்தி வந்தியதேவனாகவும் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும் ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top