Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சீயான் ஆணையிட கார்த்தி குதிரையில் பறக்க.. வெளிவந்தது புதிய போஸ்டர்..

CINEMA

சீயான் ஆணையிட கார்த்தி குதிரையில் பறக்க.. வெளிவந்தது புதிய போஸ்டர்..

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கார்த்தி இடம்பெற்ற புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்தது. அதில் விக்ரம் நெற்றியில் வெற்றித் திலகம் இட்டு குதிரையின் மேல் போர் வீரன் போல் உட்கார்ந்தபடி மாஸாக காட்சித் தந்தார்.

இந்நிலையில் தற்போது கார்த்தி ஏற்று நடித்த வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் கார்த்தி குதிரை மேல் கம்பீரமான தோற்றத்துடன் தென்படுகிறார். இப்போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வந்தியதேவன் கதாப்பாத்திரம் தான் “பொன்னியின் செல்வன்” நாவலின் முக்கிய கதாப்பாத்திரம். குறுநில மன்னர்களின் வம்சத்தில் பிறந்து பின்னர் சோழ ராஜ்ஜியத்திற்கு கீழ் தளபதியாக திகழும் கதாப்பாத்திரம். நாவலின் ஹீரோ என்றே சொல்லலாம். எனினும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் எவ்வாறு இந்த கதாப்பாத்திரம் அமைந்திருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, ஆகிய பலரும் நடிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வந்தது. இத்திரைப்படத்தை மணி ரத்னம் இயக்கி உள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்த நிலையில் கொரோனாவால் பாதியிலேயே படப்பிடிப்பு நின்றது. இதனை தொடர்ந்து சென்ற வருடம் மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்தது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Continue Reading

More in CINEMA

To Top