Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

உலக அழகி நந்தினி.. வெளியானது புதிய போஸ்டர்

CINEMA

உலக அழகி நந்தினி.. வெளியானது புதிய போஸ்டர்

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த நந்தினி கதாப்பாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்தது. அதில் விக்ரம் நெற்றியில் வெற்றித் திலகம் இட்டு குதிரையின் மேல் போர் வீரன் போல் உட்கார்ந்தபடி மாஸாக காட்சித் தந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று கார்த்தி ஏற்று நடித்த வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளிவந்தது. அதில் கார்த்தி குதிரை மேல் கம்பீரமான தோற்றத்துடன் தென்பட்டார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த நந்தினி கதாப்பாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளிவந்துள்ளது. அதில் அழகு பதுமையாக சொக்கும் விழிகளுடன் ஐஸ்வர்யா ராய் தென்படுகிறார்.

ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த நந்தினி கதாப்பாத்திரம் “பொன்னியின் செல்வன்” நாவலின் முக்கிய கதாப்பாத்திரம் ஆகும். தன் காதலனை கொன்ற சோழ இளவரசனை பழி வாங்க சூழ்ச்சி செய்யும் கதாப்பாத்திரம் தான் நந்தினி.

மயக்கும் கண்களுடன் வில்லத்தனமும் தென்படும் நந்தினி கதாப்பாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில்  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மணி ரத்னம் இயக்கி உள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்முரமாக நடந்து வந்த நிலையில் கொரோனாவால் பாதியிலேயே படப்பிடிப்பு நின்றது. இதனை தொடர்ந்து சென்ற வருடம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விரைவில் நிறைவடைந்தது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top