CINEMA
பிசாசு 2 தள்ளிப்போனதற்கு இது தான் காரணம்..??
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த “பிசாசு 2” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதற்கான காரணம் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பிசாசு 2”. இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். மிஷ்கின் இயக்கிய “பிசாசு” திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களமாக அமைந்த பேய் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து “பிசாசு 2” திரைப்படமும் வித்தியாசமான பேய் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பிசாசு 2” திரைப்படத்தில் ஆண்ட்ரியா பேயாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா இதற்கு முன் “அரண்மனை” திரைப்படத்தில் பேயாக நடித்திருந்தார். அதன் பின் “அவள்” என்ற பேய் திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் “அரண்மனை 3” திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பிசாசு 2” திரைப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் பூர்ணா, அஜ்மல், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய் உள்ளது. அதாவது இத்திரைப்படத்தை பார்த்த சென்சார் போர்டு “A” சான்றிதழ் அளித்ததாம். ஆதலால் இத்திரைப்படத்தை அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் சில காட்சிகளை கத்தரித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆதலால் தான் இத்திரைப்படம் தள்ளிப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது படத்தின் சில காட்சிகளை நீக்கி அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
