GOSSIPS
“அந்த மாதிரி சீன் படத்தில கிடையாது”.. கடுப்பான பேய் நடிகை
அந்த மாதிரி காட்சியை வெட்டி தூக்கியதால் அந்த இயக்குனர் மேல் செம காண்டில் இருக்கிறாராம் பேய் நடிகை.
பேய் நடிகை தற்போது நடித்து வரும் அந்த பேய் படத்தை உலக இயக்குனர்களுக்கே சவால் விடும் ஒரு இயக்குனர் இயக்கி வருகிறார். மிகவும் வித்தியாசமாக படம் எடுக்கும் அந்த இயக்குனர் பல நாட்களாக அந்த படத்தை இயக்கி வருகிறார். ஆனால் படம் எப்போது வெளிவரும் என்பது குறித்து எந்த அப்டேட்டும் இல்லை.
இந்நிலையில் அந்த பேய் நடிகையிடம் அடம்பிடித்து உடம்பில் ஆடை இல்லாமல் ஒரு காட்சியில் நடிக்க ஒப்புதல் வாங்கி அந்த காட்சியில் அவரை அப்படி நடிக்க வைத்தும் உள்ளாராம். ஆனால் தற்போது அந்த காட்சியை அந்த இயக்குனர் படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம். இதனால் செம காண்டாகி இருக்கிறாராம் அந்த நடிகை.
இயக்குனர் ஏன் நடிகை அப்படி நடித்த காட்சிகளை நீக்கினார்? என்பது குறித்து ஆங்காங்கே சில பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதாவது சமீபத்தில் தமிழில் வெளியான அந்த சாதனை படத்தில் அப்படிப்பட்ட ஒரு காட்சி இருந்ததாம். அந்த காட்சி பெரிதாய் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது பல நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்ததாம். ஆதலால் அப்படிப்பட்ட ஒரு காட்சி தான் இயக்கிய திரைப்படத்தில் இடம்பெற்று படம் ஓடாமல் போனால் என்ன செய்வது என்று யோசித்து தான் இயக்குனர் அப்படி ஒரு முடிவை எடுத்தாராம்.
ஆனால் நடிகையோ “அந்த காட்சியில் நான் சிறப்பாக நடித்திருந்தேன். ஆனால் அந்த காட்சியை தூக்கிவிட்டார் இயக்குனர்” என செம காண்டில் இருக்கிறாராம். இவ்வாறு கோலிவுட் வட்டாரங்களில் அந்த நடிகையின் கோபத்தை குறித்து கிசுகிசுக்கப்படுகிறது.
