Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பவித்ராவின் உடல் நிலை மோசமானதிற்கு இது தான் காரணமா? அய்யோ பாவம்!!

CINEMA

பவித்ராவின் உடல் நிலை மோசமானதிற்கு இது தான் காரணமா? அய்யோ பாவம்!!

நடிகை பவித்ராலட்சுமி, தனது உடல் நிலை மோசமானதற்கு இது தான் காரணம் என ஓபனாக கூறியுள்ளார்.

கோயம்பத்தூரை சொந்த ஊராக கொண்ட பவித்ராலட்சுமி கடந்த 2010 ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியின் “மானாட மயிலாட” சீசன் 10 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இவ்வாறு நடனத்தை தனது  முழு மூச்சாக கொண்ட பவித்ரா கடந்த 2017 ஆம் ஆண்டு “Queen of Madras” என்ற பட்டத்தையும் வென்றார். அதனை தொடர்ந்து குறும்படங்களில் நடிக்க தொடங்கிய பவித்ரா 2020 ஆம் ஆண்டு “குக் வித் கோமாளி” சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குகொண்டு இறுதிச்சுற்று வரை சென்றார்.

அதனை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு “சித்து பிளஸ் 2” என்ற திரைப்படத்தில் சிறு ரோலில் நடித்திருந்த பவித்ரா, சமீபத்தில் தமிழில் “நாய் சேகர்” திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் “உல்லாசம்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சமீப காலமாக அவரது உடல் எடை குறைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் அவரிடம் காரணத்தை கேட்டு வந்தனர். மேலும் “உடல் எடை குறைவதற்கான டிப்ஸ்களையும் கொடுங்கள்” என கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது தனது உடல் எடை குறைவு குறித்து ஓபனாக கூறியுள்ளார் பவித்ரா. அதாவது “எனது உடல் எடை குறைந்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நான் வேண்டுமென்றே எனது உடல் எடையை குறைக்கவில்லை, ஓயாத படப்பிடிப்புகள் காரணமாக நான் சரியாக தூங்குவதும் இல்லை, சாப்பிடுவதும் இல்லை. இது உடல் நலத்திற்கு கேடு என்பது எனக்கு தெரியும். ஆனாலும் விரைவில் அதில் இருந்து மீண்டு வந்து எனது உடலை கவனித்துக்கொள்வேன்” என கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர் “உடல் எடை குறைவதற்கான டிப்ஸ்களை என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால் நேரத்திற்கு சாப்பிடுங்கள், நேரத்திற்கு தூங்குங்கள் என்பது தான்” எனவும் கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top