CINEMA
“பத்தல பத்தல”…சும்மா இறங்கி குத்து ஆண்டவா…
பெரும் எதிர்பார்பில் ஒரு வழியாக வெளிவந்தது “விக்ரம்” திரைப்படத்தின் “பத்தல பத்தல” பாடல்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் “விக்ரம்”. லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ்-கமல் கூட்டணி மாஸாக கலக்கப்போவது உறுதி என ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேறி கிடக்கிறார்கள்.
அதே போல் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என மாஸ் ஹீரோக்களின் கூட்டணி வேறு. படம் வெளியாகும் நாளில் நிச்சயம் திருவிழா தான் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவந்தது.
மே 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை “விக்ரம்” திரைப்படத்தின் “பத்தல பத்தல” சிங்கிள் வெளிவரவுள்ளதாக அனிருத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் “கமல் இறங்கி குத்தப்போறார்” என குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று மதியம் இப்பாடலின் புரோமோ வீடியோ ஒன்று வெளிவந்தது. அதில் கமல் தர லோக்கலாக ஆடை அணிந்து Terrific-ஆக காட்சி தந்தார். பின்னால் இசைக்கும் அனிருத்தின் இசை நாடி நரம்புகளை துள்ளாட்டம் போட வைத்தது.
இந்நிலையில் வெயிட்டிங்கில் வெறியேத்திக் கொண்டிருந்த “விக்ரம்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் “பத்தல பத்தல” பாடல் வெளிவந்துள்ளது. கமல் வேற லெவலில் இறங்கி குத்தியிருக்கிறார். பாடல் தர லோக்கலாகவும் மாஸாகவும் இருக்கிறது. பாடலில் கமல்ஹாசனின் அரசியல் ஒட்டி சில வரிகளும் இடம்பெற்றுள்ளன. வெகு காலம் கழித்து கமல்ஹாசன் குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். வெகு காலம் கழித்து கமல் திரைப்படத்தில் குத்து பாடல் ஒன்று இடம்பெறுகிறது என்றே சொல்லவேண்டும்.
