TELEVISION
“அடுத்த சிவகார்த்திகேயன் இவர் தான்?” பார்த்திபன் பாராட்டு
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரை பார்த்து நடிகர் பார்த்திபன் அடுத்த சிவகார்த்திகேயன் என கூறி பாராட்டியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் “இரவின் நிழல்” திரைப்படத்தின் புரோமோஷனுக்காக பாத்திபன் மற்றும் பிரிகிடா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கே சக கன்டெஸ்டன்ட்டுகளுடனும் கோமாளிகளுடனும் கலகலப்பாக பேசினார். எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் பழக்கம் உடைய பார்த்திபன், நிகழ்ச்சியில் “இரவின் நிழல்” திரைப்படத்தின் புரொமோஷனுக்காக புதுமையான விதம் ஒன்றை கையாண்டார்.
அதாவது இருவரும் ஒரு வாழை இலையில் “இரவின் நிழல்” என எழுதி கொண்டு வந்தனர். கூடவே ஒரு சாப்பாட்டு கேரியரையும் கொண்டு வந்தனர். அதாவது “இரவின் நிழல்” திரைப்படத்தை வாழை இலையில் சாப்பாடு போல் பரிமாறப்போகிறோம் என்ற வகையில் உணர்த்துமாறு அப்படி புரோமோட் செய்தனர்.
அதனை தொடர்ந்து அங்குள்ளவர்கள் ஒவ்வொருவரின் திறமையை பற்றியும் பேசிக் கொண்டே இருந்த பார்த்திபன், நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்சனை பார்த்து “நீங்கள் ஹீரோவாக படம் நடிக்கப் போவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் தான் அடுத்த சிவகார்த்திகேயன்” என கூறினார். இதை கேட்ட ரக்சன் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
“இரவின் நிழல்” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படம் உலகின் முதல் Non Linear Single Shot திரைப்படமாக வெளியாக உள்ளது. மேலும் பிரான்சில் நடைபெற்ற பிரபல கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் Screen செய்யப்பட்டது.
“இரவின் நிழல்” திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா சாகா ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
