CINEMA
“கையில் துப்பாக்கியுடன் மேடை ஏறிய பார்த்திபன்”..இன்னுமா இவர் அந்த மைக்கை விடல..
“விக்ரம்” ஆடியோ லாஞ்ச் விழாவில் பார்த்திபன் புதுமையான முறையில் துப்பாக்கி முனையில் கோர்க்கப்பட்ட மைக்குடன் மேடை ஏறிய பார்த்திபன்.
இரவின் நிழல் திரைப்படத்தின் “Single” மற்றும் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டார். விழாவில் ஏ.ஆர்.ரகுமானை பேட்டிக்கண்ட போது பார்த்திபன் பேசிக்கொண்டிருந்த மைக் சரியாக வேலை செய்யவில்லை என தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து விழா மேடையின் முன்னால் நின்று மைக்கை தூக்கி வீசினார். அவர் தூக்கி வீசிய மைக் நடிகர் ரோபோ ஷங்கர் மேல் விழுந்ததாக தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து ரோபோ ஷங்கரை பார்த்திபன் நேரில் சந்தித்து கையில் மைக்குடன் அவருக்கு முத்தம் கொடுப்பது போன்று ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர், மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர், மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், முடிவில் முத்தமிட்டவர்” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் “விக்ரம்” திரைபடத்தின் ஆடியோ லாஞ்ச் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அப்போது விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் மேடையில் துப்பாக்கியோடு ஏறினார். ஆனால் அது துப்பாக்கி அல்ல, துப்பாக்கி பிடியில் கோர்க்கப்பட்ட மைக் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர் “இந்த மைக் பிரச்சனை பெரிய பிரச்சனையா இருக்கு. ஆதலால் நானே ஒரு மைக்கை கொண்டு வந்துட்டேன்” என கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
அப்போது விழாவில் அமர்ந்திருந்த ரோபோ ஷங்கர் தன் இரண்டு கைகளாலும் ஓங்கி கைத்தட்டினார்.
