CINEMA
பார்த்திபனுக்கு ரஜினி கைப்பட எழுதிய கடிதம்.. என்ன மனசுயா!!
“இரவின் நிழல்” திரைப்படத்தை பாராட்டும் விதமாக பார்த்திபனுக்கு ரஜினிகாந்த் தனது கைப்பட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
பார்த்திபன் இயக்கி நடித்த “இரவின் நிழல்” திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இதில் பார்த்திபனுடன் பிரிகிடா சாகா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், சாய் பிரியங்கா ரூத் என பலரும் நடித்திருக்கின்றனர்.
“இரவின் நிழல்” திரைப்படம் உலகின் முதல் நான் லீனீயர் சிங்கில் ஷாட் திரைப்படமாக வெளிவந்துள்ளது. ரசிகர்கள் இந்த சாதனைக்காக பார்த்திபனை பாராட்டி வருகின்றனர். மேலும் திரைத்துறையினரும் பார்த்திபனை புகழ்ந்து வருகின்றனர். “இரவின் நிழல்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் “தமிழ் சினிமாவிற்கு பெரும் சேர்த்திருக்கிறார் பார்த்திபன்” என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் “இரவின் நிழல்” திரைப்படத்தை ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து பார்த்திபனை நேரில் அழைத்தும் பாராட்டியுள்ளார். மேலும் பார்த்திபனை பாராட்டி ரஜினிகாந்த் தனது கைப்பட ஒரு கடித்தை எழுதி தந்துள்ளார். இக்கடிதத்தை குறித்து பார்த்திபன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் “இந்த சாதனையை செய்த பார்த்திபனுக்கும் அவரது படக்குழுவினருக்கும், ஏ ஆர் ரகுமானுக்கும், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனுக்கும் எனது மனதார பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்” என எழுதியுள்ளார். இதனை மிகவும் மகிழ்ச்சி பொங்க படித்து காட்டினார் பார்த்திபன். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த சாதனையை தொடர்ந்து பார்த்திபன் தனது அடுத்த படத்தில் விலங்குகளை மட்டுமே வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் வந்துள்ளது. இச்செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
View this post on Instagram
