TELEVISION
பார்த்தியின் ஆசையில் மண் அள்ளி போட்ட தாய்.. அடப்பாவமே!!
பார்த்தியின் ஆசையில் அவரது தாய் மண் அள்ளிப்போட்டுள்ள சம்பவம் பார்த்தியை செம காண்டுக்கு தள்ளியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” சீசன் 2 தொடரில் காவ்யா திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்தார் என்பதை அறிந்த பின் பார்த்தியின் தாயார் காவ்யாவிடம் “பார்த்தியிடம் இருந்து விலகியே இரு” என கூறினார்.
இதனை கேட்டு கதறி அழுத காவ்யா, பார்த்தியின் தாய் கூறிய விஷயத்திற்கு தயார் ஆனார். அதன் பின் பார்த்தி மேல் வேண்டும் என்றே எரிச்சல் அடைந்து வந்தார்.
இந்த நிலையில் காவ்யா தேர்வு எழுதிகொண்டிருக்கும் போது தீ விபத்து நிகழ்ந்தது. இதில் காவ்யாவை காப்பாற்றச் சென்ற பார்த்திக்கு தீ காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின் வீடு திரும்பிட பார்த்தி ஓய்வில் இருக்கிறார்.
எப்போதும் காவ்யாவின் அன்புக்காக ஏங்கிகொண்டிருக்கும் பார்த்திக்கு சரியான வாய்ப்பாக ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த புரோமோவில் பார்த்தியால் தனது கைகளை பயன்படுத்தி சாப்பிட முடியாத நிலையில் காவ்யா பார்த்திக்கு ஊட்டிவிட முடிவு செய்தார். இதனால் குஷி ஆன பார்த்தி பெரும் ஆசையோடு இருந்தார்.
காவ்யா பார்த்தியை பார்த்து “ஊட்டிவிடவா?” என கேட்க பார்த்தி தனது உடலை கிள்ளிப்பார்த்தார். என்ன என்று கேட்டதற்கு “இது கனவா? நிஜமா?” என கிள்ளிப்பார்த்தேன் என்கிறார். அதன் பின் தன் அருகில் அமர்ந்த காவ்யாவை பார்த்து பார்த்தி “உணவு சூடாக இருக்கும்” என கூற, அதற்கு காவ்யா சூடு ஆறவேண்டும் என்பதற்காக ஊதினார். இதை பார்த்த பார்த்தி சிலிர்த்துபோகிறார்.
அதன் பின் காவ்யா ஊட்டிவிட போகும்போது பார்த்தியின் தாயார் காவ்யாவை தடுத்து தான் ஊட்டிவிடுவதாக கூறுகிறார். இவ்வாறு பார்த்தியின் ஆசையில் மண் அள்ளி போட்டுள்ளார் அவரது தாய்.
