CINEMA
“உங்கள் காலில் விழுகிறேன்”.. ரசிகர்களின் காலில் விழுந்த பார்த்திபன்.. நெகிழ்ச்சி தருணம்
நடிகர் பார்த்திபன் உணர்ச்சிவசத்தில் ரசிகர்களின் காலில் விழுந்தார். ஏன் தெரியுமா?
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்த “இரவின் நிழல்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. எங்கு திரும்பினாலும் இத்திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் ரிவ்யூக்களே வந்த வண்ணம் உள்ளது. ரசிகர்கள் மிகவும் பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்களே அளிக்கின்றனர்.
“இரவின் நிழல்” திரைப்படம் உலகின் முதல் Non Linear Single Shot திரைப்படமாக வெளியாகி சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கமலா திரையரங்கில் 4 மணி காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கையில் இடைவேளையில் பார்த்திபன் மற்றும் பிரிகிடா சாகா ரசிகர்களிடம் தோன்றினர். ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக அவர்களை வரவேற்றனர்.
அப்போது பேசிய பார்த்திபன் “என் திரைப்படத்திற்கு ஆஸ்கார் கிடைக்கும் என்று கூட எதிர்பார்த்திருக்கிறேன். ஆனால் 4 மணி காட்சிக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார்.
மேலும் உணர்ச்சிவசப்பட்டு திரையரங்குகளில் ரசிகர்களின் காலில் விழுந்து வழங்கினார். அதன் பின் பேசிய அவர் “எனது இரண்டரை வருட உழைப்பு, 32 வருட முயற்சி, இது எல்லாவற்றையும் சேர்த்து இவ்வளவு பெரிய மரியாதையை கொடுப்பீர்கள் என தெரியவில்லை” என கண்கலங்கினார்.
“இந்த கால ரசிகர்கள் மிகவும் மாறி இருக்கிறார்கள், நல்ல திரைப்படங்களை வரவேற்க வேண்டும் என்ற உங்கள் ரசனைக்கு நான் தலை வணங்குகின்றேன்” என நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து விட்டு “இரவின் நிழல்” திரைப்படத்தின் வரவேற்பை கொண்டாடும் வகையில் திரையரங்கிலேயே கேக் வெட்டினார்.
“இரவின் நிழல்” திரைப்படத்தில் பார்த்திபனுடன் பிரிகிடா சாகா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், சாய் பிரியங்கா ரூத் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
