CINEMA
“மைக்கை கேட்ச் பிடிக்காதவர் ரோபோ ஷங்கர்”… முத்தம் கொடுத்த பார்த்திபன்
இரவின் நிழல் டீசர் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்த விவாகரத்தில் ரோபோ ஷங்கரிடம் வித்தியாசமான முறையில் தனது மன்னிப்பை கோரியுள்ளார் பார்த்திபன்.
இரவின் நிழல் திரைப்படத்தின் “Single” மற்றும் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டார். விழாவில் ஏ.ஆர்.ரகுமானை பேட்டிக்கண்ட போது பார்த்திபன் பேசிக்கொண்டிருந்த மைக் சரியாக வேலை செய்யவில்லை என தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து விழா மேடையின் முன்னால் நின்று மைக்கை தூக்கி வீசினார். அவர் தூக்கி வீசிய மைக் நடிகர் ரோபோ ஷங்கர் மேல் விழுந்ததாக தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து பின்பு விழாவில் பேசிய பார்த்திபன், “நான் ஏ .ஆர் .ரகுமானுக்கு கொடுத்த விருதை தூக்கும்போது கை மிகவும் வலித்தது. அதனால் உடல் சோர்வடைந்து பேச கஷ்டமாக இருந்து. இந்நேரத்தில் மைக்கும் சரியாக வேலை செய்யவில்லை என தெரிந்ததும் கோபம் வந்துவிட்டது. இது அநாகரிக செயல் தான். மன்னித்துவிடுங்கள்” என ரசிகர்களிடம் அப்போதே மன்னிப்பு கேட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பார்த்திபன் வீடியோ சமீபத்தில் ஒன்றை வெளியிட்டார். அதில் “ஏ. ஆர். ரகுமானுக்கு கொடுத்த விருதை தூக்க முடியாமல் கை ஷாக் அடித்த மாதிரி ஆகின. மேலும் விழா நன்றாக நடக்க வேண்டும் என்ற டென்ஷனும் இருந்தது. அந்த நேரத்தில் மைக் வேலை செய்யவில்லை என்றவுடன் என்னுள் பேய் புகுந்தது போல் ஆகிவிட்டது” என்று கூறினார்.
View this post on Instagram
இந்நிலையில் ரோபோ ஷங்கரை பார்த்திபன் நேரில் சந்தித்து கையில் மைக்குடன் அவருக்கு முத்தம் கொடுப்பது போன்று ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர், மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர், மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், முடிவில் முத்தமிட்டவர்” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.