CINEMA
“ஐஸ்வர்யா ராய் வரல, அதனால தான்….?”.. உண்மையை போட்டு உடைத்த பார்த்திபன்
ஐஸ்வர்யா ராய் வராததால் தான் நிகழ்ச்சிக்கு வரவில்லை என ஓபனாக பேசியுள்ளார் பார்த்திபன்.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது.
இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, சரத் குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, மணி ரத்னம், ஏ ஆர் ரகுமான் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.
இதில் விக்ரம் உடல் நலம் மோசமானது காரணமாக கலந்து கொள்ளவில்லை. மேலும் ஐஸ்வர்யா ராய் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் பேட்டியில் கலந்து கொண்ட பார்த்திபனிடம் “பொன்னியின் செல்வன்” டீசர் வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பார்த்திபன், “ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளவில்லையே. அதனால் தான் நான் கலந்து கொள்ளவில்லை” என கூறினார்.
அதன் பின் மேலும் பேசிய அவர் “சும்மா தமாஸுக்கு சொன்னேன். என்னுடைய இரவின் நிழல் திரைப்படம் வெளிவரும் வரை எந்த விழாவிலும் என்னால் கலந்து கொள்ள முடியாது” என கூறினார்.
பார்த்திபன் இயக்கி நடித்த “இரவின் நிழல்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் உலகின் முதல் Non Linear Single Shot திரைப்படமாக வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
