CINEMA
படையாப்பாவும் நீலாம்பரியும் ஜோடி சேரப் போறாங்க??
23 வருடங்கள் கழித்து ரஜினி திரைப்படத்தில் மீண்டும் இணையும் அந்த பெண் வில்லி?
கடந்த 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் “படையப்பா”. 90’s kid-களின் விருப்பமான படங்களில் “படையப்பா” திரைப்படமும் அடங்கும்.
“படையப்பா” திரைப்படத்தில் ரஜினியின் ஸ்டைல் வேற லெவலில் இருக்கும். குறிப்பாக அந்த ஊஞ்சலை இழுத்து விட்டு உட்காரும் காட்சியில் தியேட்டரே அலறியது. இன்றும் அக்காட்சியை பார்க்கும் போது Goose bumps ஆக இருக்கும்.
“படையப்பா” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லியாக அசத்தி இருப்பார். அவர் பேசும் ஒவ்வொரு வசங்களும் தாறு மாறாக இருக்கும். குறிப்பாக “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் என்னைக்கும் உன்ன விட்டு போகாது” என ரஜினியை பார்த்து அவர் கூறும்போது அதற்கு ரஜினி “கூடவே பிறந்தது, என்னைக்கும் போகாது” என பதில் கூறும்போது ரசிகர்கள் சிலிர்த்து போயினர்.
இந்நிலையில் தற்போது “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினிகாந்தை வைத்து புதிய திரைப்படத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் “படையப்பா” திரைப்படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன் ரஜினி நடிக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் நெல்சனுடன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதையை பலப்படுத்துவதற்காக இணைவதாக தகவல்கள் வெளிவந்தன. “படையப்பா” திரைப்படத்தையும் கே. எஸ். ரவிக்குமார் தான் இயக்கினார். இதை வைத்து பார்க்கும் மீண்டும் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாக தெரிகிறது.