CINEMA
காதல் ஒரு அரசியல்.. ரஞ்சித்தின் புதிய படத்தின் போஸ்டர்…
ரஞ்சித் இயக்கத்தில் உருவான “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
பா. ரஞ்சித் “அட்டக்கத்தி”, “மெட்ராஸ்”, “காலா”, “சார்பட்டா பரம்பரை” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். மேலும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”, “ரைட்டர்”, “சேத்துமான்” ஆகிய திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.
பா. ரஞ்சித் காளிதாஸ் ஜெயராமை வைத்து “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் அத்திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
வண்ணமயமான அந்த போஸ்டர் அட்டகாசமாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார்.
“நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் முழுக்க முழுக்க Romantic Drama ஆக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன், துஷாரா விஜயன், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து பா. ரஞ்சித் சீயான் விக்ரமின் 61 ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. பா. ரஞ்சித் இத்திரைப்படத்தை 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இத்திரைப்படம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் மிக பிரம்மாண்டமான கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளதாம். ஆதலால் அதிகளவில் பட்ஜெட் ஒதுக்கப்பட உள்ளதாம்.
பா. ரஞ்சித் சீயான் விக்ரமின் 61 ஆவது திரைப்படத்தை தொடர்ந்து “வேட்டுவம்” என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதன் பின் கமல் ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Love is Political! #NatchathiramNagargiradhu, My next directorial, coming soon to cinemas near you. @officialneelam @YaazhiFilms_ pic.twitter.com/ss1oRNf6HQ
— pa.ranjith (@beemji) July 6, 2022