CINEMA
3D தொழில்நுட்பத்தில் படம் எடுக்கும் ரஞ்சித்.. வேற லெவல்..
பா. ரஞ்சித் தனது அடுத்த திரைப்படத்தை 3D தொழில்நுட்பத்தில் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா. ரஞ்சித் “அட்டக்கத்தி”, “மெட்ராஸ்”, “காலா”, “சார்பட்டா பரம்பரை” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். இவர் தற்போது காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”, “ரைட்டர்”, “சேத்துமான்” ஆகிய திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.
பா. ரஞ்சித் தற்போது சீயான் விக்ரமின் 61 ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது பா. ரஞ்சித் இத்திரைப்படத்தை 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயக்க உள்ளாராம். மேலும் இத்திரைப்படம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் மிக பிரம்மாண்டமான கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளதாம். ஆதலால் அதிகளவில் பட்ஜெட் ஒதுக்கப்பட உள்ளதாம்.
பா. ரஞ்சித் சீயான் விக்ரமின் 61 ஆவது திரைப்படத்தை தொடர்ந்து “வேட்டுவம்” என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதன் பின் கமல் ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பா. ரஞ்சித், “கமல் ஹாசனை வைத்து நிச்சயம் ஒரு படம் இயக்குவேன்” என கூறினார். ஆதலால் ரசிகர்கள் கமல்-ரஞ்சித் கூட்டணிக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வேளையில் தற்போது சீயான் விக்ரமை வைத்து பா. ரஞ்சித் இயக்கும் திரைப்படம் 3D தொழில்நுட்பத்தை கொண்டு இயக்க உள்ளதாக வெளிவந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது.