GOSSIPS
அக்காவை பார்த்து வயித்தெரிச்சலான தங்கை நடிகை.. விரக்தியில் எடுத்த முடிவு..
“அக்கா” நடிகையின் டாப் ஆன கேரியரை பார்த்து விரக்தியடைந்த “தங்கை’ நடிகை ஒரு விபரீதமான முடிவை எடுத்துள்ளாராம்.
தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலும் உச்சம் பெற்ற “குழப்ப” நடிகரின் மகள்களான “அக்கா” நடிகையும் “தங்கை” நடிகையும் சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் ஆகிறது.
“அக்கா” நடிகையோ கதாநாயகியாக அறிமுகமான சில ஆண்டுகளிலேயே டாப் கியர் போட்டு உச்சத்திற்கு சென்றார். தமிழ் மட்டுமல்லாது பக்கத்து மாநில மத்திய மாநில திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் தற்போது பக்கத்து மாநிலத்தில் சமீபத்தில் மாஸ் திரைப்படம் ஒன்றை கொடுத்து பிரபலமான இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.
ஆனால் “அக்கா” நடிகையை போல் “தங்கை” நடிகைக்கு அவ்வளவு மார்க்கெட் இல்லையாம். இத்தனைக்கும் அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமே இந்தியாவின் டாப் நடிகர்கள் இருவர் சேர்ந்து நடித்த படம் தான். ஆனாலும் அவருக்கு மார்க்கெட் எகிறவில்லையாம்.
சமீபத்தில் “தங்கை”நடிகை நடித்த வெப் சீரீஸை கூட ஊத்திக்கிட்டதாம். ஆதலால் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் “என்னோட அக்கா மாதிரி நான் டாப் ஹீரோஸ் ஓட தான் நடிப்பேன்” என அடம்பிடிக்கிறாராம். அப்படியும் சில இயக்குனர்கள் “தங்கை” நடிகையை கன்வின்ஸ் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் “நான் யார் தெரியுமா, என்னோட அப்பா யார் தெரியுமா” என ஓவராக பிகேவ் செய்கிறாராம்.
இதனால் இயக்குனர்கள் யாரும் அவரின் பக்கம் செல்ல தயங்குகிறார்களாம். “நான் நடித்தால் அக்கா மாதிரி பெரிய ஹீரோஸ் கூடத் தான் நடிப்பேன், இல்லைன்னா நடிக்க மாட்டேன்’ என ஒரு பிரின்சிபலோடு வாழப்போகிறாராம் இனி. “அவரின் நிலைமையை பார்த்து சிரிப்பதா அல்லது பாவப்படவா என்று தெரியவில்லை” என கோலிவுட் வட்டாரங்கள் ஆங்காங்கே கிசு கிசுக்கின்றன.
