CINEMA
சாமியாராக மாறிய பிரேமம் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
“பிரேமம்” திரைப்படத்தில் நடித்த நிவின் பாலி தற்போது சாமியாராக மாறியுள்ளார். ஏன் தெரியுமா?
மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்.
இவர் தமிழில் “நேரம்”, “ரிச்சி” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் இயக்குனர் ராம் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நிவின் பாலி மலையாளத்தில் “1983”, “ஆக்சன் ஹீரோ பிர்ஜூ”, “ஓம் சாந்தி ஓசானா”, “ஒரு வடக்கன் செல்ஃபி”, “சகாவு” என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக இவர் உடல் எடை அதிகமாக காணப்படுகிறார். எதாவது படத்திற்காக இப்படி உடல் எடையை ஏற்றி உள்ளாரா? என தெரியவில்லை. ரசிகர்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நிவின் பாலி சாமியாராக வலம் வருகிறார். ஆம்! அதாவது இவர் நடிப்பில் “மஹாவீர்யர்” என்ற திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது.
இத்திரைப்படத்தில் நிவின் பாலி அற்புதங்களை நிகழ்த்தும் சாமியாராக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
அதனை பார்க்கும் போது மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதும் மலையாள திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு Fan base உண்டு. குறிப்பாக நிவின் பாலிக்கும் இங்கு ரசிகர்கள் உண்டு. ஆதலால் “மஹாவீர்யர்” திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நிவின் பாலிக்கு “மஹாவீர்யர்” திரைப்படத்தை தொடர்ந்து “துறமுகம்” திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து “படவேட்டு” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராம் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.