CINEMA
“எனக்கு திருமணம் நடக்கப்போகிறது”? உண்மையை உடைத்த நித்யா மேனன்
நித்யா மேனனுக்கு திருமணம் நடைபெறப்போவதாக செய்திகள் கிளம்பிய நிலையில் அவரே தற்போது அந்த விஷயத்தை தெளிவுப்படுத்தி உள்ளார்.
தென்னிந்திய இளைஞர்களின் கியூட் கேர்ளாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் “180”, “வெப்பம்”, “மாலினி 22 பாளையங்கோட்டை”, “காஞ்சனா 2”, “ஓகே கண்மணி”, “24”, “மெர்சல்”, “சைக்கோ” ஆகிய பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தனுஷ் நடிப்பில் உருவான “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 18 ஆம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் நித்யா மேனன் படிக்கட்டில் தவறி விழுந்து அவரது காலில் பலத்த அடிப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நித்யா மேனன் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என சில செய்திகள் வெளிவந்தன.
நித்யா மேனன் தற்போது தனது திருமண விஷயம் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் தற்போது திருமணம் செய்யும் ஐடியாவில் இல்லை. இது யாரோ அழகாக கிளப்பிவிட்ட வதந்தி தான்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய நித்யா மேனன் “கொரோனா லாக் டவுனில் நான் நடிக்க இருந்த பல திரைப்படங்கள் தற்காலிகமாக முடங்கியது. ஆதலால் கடந்த ஒரு வருடமாக முடங்கிப்போன திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்திலும் நடித்து வந்தேன். ஒரு நாள் கூட இடைவேளை இல்லாமல் கடுமையாக உழைத்துவிட்டேன்.
ஆதலால் தற்போது ஒரு சின்ன பிரேக் தேவைப்படுகிறது. இனி கொஞ்ச நாள் என் வாழ்நாளை எனக்காக செலவிடப்போகிறேன்” எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவரது கால் ஓரளவு சரியாகிவிட்டதாகவும், இப்பொழுது எழுந்து நடக்கமுடிகிறது எனவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
