CINEMA
“இது செய்யலைன்னா உன்னைய தூக்கிட்டு போயிடுவேன்…” மிரட்டிய தனுஷ், பணிந்த நித்யா மேனன்
நடிகர் தனுஷ், நித்யா மேனனை மிரட்டி அந்த செயலை செய்துள்ளார். என்ன தெரியுமா?
தனுஷ் கதாநாயகனாக நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் பிரியா பவானி ஷங்கர், ராசி கண்ணா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
“திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனிரூத் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களையும் பரவலாக ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக “தாய் கிழவி”, மேகம் கருக்குதா” போன்ற பாடல்கள் வைரல் ஆகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் தனுஷ், பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
நித்யா மேனன் சில நாட்களுக்கு முன் காலில் அடிபட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். தற்போது முழு ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் நேற்று “திருச்சிற்றம்பலம்” ஆடியோ வெளியீட்டு விழாவில் வீல் சேரில் வந்து கலந்து கொண்டார்.
அப்போது நிரூபரிடம் பேசிய அவர் “தனுஷ் என்னை கண்டிப்பாக வரவேண்டும் என கூறினார். வரவில்லை என்றால் நாங்கள் அனைவரும் தூக்கி கொண்டு போவோம் என கூறினார். அதன் பிறகு நான் இவ்விழாவிற்கு வருவதற்கு ஒத்துக்கொண்டேன்” என கூறினார்.
The Gorgeous @MenenNithya has arrived at the Red Carpet of #Thiruchitrambalam Audio Launch 😍 pic.twitter.com/bS1ejSBYCy
— Sun Pictures (@sunpictures) July 30, 2022
மேலும் பேசிய அவர் “திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நான் காத்திருக்கிறேன். நிச்சயம் இத்திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும்” எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது. “திருச்சிற்றம்பலம்” ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
