CINEMA
சின்னத்திரையில் ஜொலிக்க இருக்கும் நிக்கி கல்ராணி…
நிக்கி கல்ராணிக்கு சமீபத்தில் ஆதியுடன் திருமணம் முடிவடைந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் ஜொலிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதியும் நிக்கி கல்ராணியும் “மரகத நாணயம்” “யாகாவாரயினும் நா காக்க”, “மலுப்பு” போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இருவரும் “மரகத நாணயத்தில்” ஜோடியாக நடித்ததில் இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்து வந்ததாக கூறப்பட்டது.
பல ஆண்டுகளாக dating, romance என சுற்றி கொண்டிருந்தவர்களின் காதல் விஷயம் வெளியே தெரியவிடாமல் நாசுக்காக இருவரும் பார்த்துக் கொண்டனர். சினிமா வட்டாரங்கள் மத்தியில் மட்டுமே கிசுகிசுக்கப்பட்டது.
எனினும் “மரகத நாணயம்” திரைப்படத்தில் நிக்கி கல்ராணி தற்கொலை செய்திருப்பார். அவருக்குள் ஒரு ஆணின் ஆவி புகுந்திருக்கும். ஆதி நிக்கி கல்ராணியை ஒரு தலையாக காதலித்திருப்பார். அத்திரைப்படத்தில் இருவரும் சேரமாட்டார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து விட்டார்கள்.
சமீபத்தில் இருவரும் இரு வீட்டார் சம்மதத்தோடு உறவினர்கள் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். பார்ப்பவர்களின் கண்கள் படும் வகையில் மகிழ்ச்சியுடன் இணையராக பல புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தனர். இதனை தொடர்ந்து திருமணத்திற்கு பின் நிக்கி கல்ராணி நடிப்பாரா? மாட்டாரா? என்று ரசிகர்களிடம் கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது. ஆம்! நிக்கி கல்ராணி சின்னத்திரையில் ஜொலிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நிக்கி கல்ராணி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள “வெல்லும் திறமை” என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ரியாலிட்டி ஷோ அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் ரசிகர்கள் நிக்கி கல்ராணி சினிமாவில் மீண்டும் எப்போது ஜொலிப்பார்? என காத்துக் கொண்டிருக்கின்றனர்.
