GOSSIPS
“நடிச்சா ஹீரோயின் தான், இல்லைன்னா?”… “சைடு” நடிகை போட்ட கண்டிஷன்
இனிமேல் அது போன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என அந்த “சைடு” நடிகை ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.
ஒரு பிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை சீரீயலில் நடித்து ஜொலித்து வந்த அந்த நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் மனதை திணறடித்து வந்தார்.
அதன் பின் திடீரென பிரபலமான ரியாலிட்டு ஷோவு ஒன்றுக்குள் நுழைந்த அந்த நடிகை உள்ளே தனது கவர்ச்சி பொங்கும் மேனியால் தினமும் சுற்றி வந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வந்தார். ரியாலிட்டி ஷோவில் இளம் ஆண் ஒருவருடன் காதல் புறாவாக அழைந்து கொண்டிருந்தார். அதன் பின் அவர் அம்மா உள்ளே வந்து செமத்தியாக ரைட்டு லெஃப்ட்டு என விட்டப் பின் கொஞ்சம் அமைதியானார்.
அதன் பின் சமீபத்தில் வெளிவந்த “குழப்ப” நடிகர் திரைப்படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் நடித்த “தூணிலும் துரும்பிலும்” இருக்கும் நடிகருக்கு மூன்று மனைவிகளில் ஒருவராக “சைடில்” உட்கார்ந்திருந்தார் அந்த “சைடு” நடிகை. மேலும் படம் முழுக்கவே படத்தின் ஒரு ஓரத்தில் தான் நின்றுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தான் நடித்தால் இனிமேல் ஹீரோயினாகத் தான் நடிக்கப்போவதாகவும் இது போன்ற சின்ன சின்ன ரோல்களில் இனிமேல் நடிக்கமுடியாது எனவும் கண்டிஷன் போட்டு உள்ளாராம். “குழப்ப” நடிகர் திரைப்படத்திற்கு பின் பல வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அது எல்லாம் சிறு சிறு கதாப்பாத்திரங்களாகவே இருந்ததாம். ஆதலால் அனைத்தையும் ரிஜெக்ட் செய்து விட்டு ஹீரோயின் சான்ஸ்க்காக வெயிட் செய்து கொண்டிருக்கிறாராம்.
சினிமாவில் சிறு ரோலாவது கிடைக்காதா என் ஏங்கி கிடப்போர் பலர் இருக்க, இவரோ இனிமேல் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என கங்கனம் கட்டிக் கொண்டு திரிவது சரியாக படவில்லை என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.