GOSSIPS
“நான் “அவர்” கூட மட்டும் தான் நடிப்பேன்”… அடம்பிடிக்கும் “புது முக” நடிகை
தன்னுடன் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் தான் நடித்தால் “அந்த” நடிகருடன் தான் நடிப்பேன் என அடம்பிடிக்கிறாராம் அந்த “புது முக” நடிகை.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழின் மாஸ் ஆடியன்ஸை ரசிகர்களாக வைத்திருக்கும் அந்த “ஆடியோ லாஞ்ச்” நடிகருடன் ஜோடியாக நடித்தார் அந்த “புது முக” நடிகை. எனினும் அந்த நடிகை ஏற்கனவே நமது “பக்கத்து” மாநிலத்தில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பக்கத்து” மாநிலத்தில் எல்லாம் மார்க்கெட் சரிவர இல்லை என பேச்சு அடிபடுகிறதாம். தமிழ் படத்தில் நடிக்க தொடங்கியவுடன் மார்க்கெட் எகிறியுள்ளதாம். தற்போது பல இயக்குனர்கள் கதை சொல்ல வருகிறார்களாம்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் தமிழில் “வில் அம்பு” ஏந்திய பெயரைக் கொண்ட நடிகருடன் நடித்த பிறகு, அந்த நடிகரை மிகவும் பிடித்துவிட்டதாம். எந்த இயக்குனர் கதை சொல்ல வந்தாலும் “வில் அம்பு” நடிகருடன் தான் நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறாராம்.
என்னதான் “பக்கத்து” மாநில திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் படங்களில் நடிப்பது தான் மிகவும் பிடித்திருக்கிறதாம். அதுவும் “வில் அம்பு” நடிகருடன் நடிப்பதில் தான் மிகவும் குஷியாக உள்ளதாக கூறுகிறாராம். கோலிவுட்டில் தற்போது பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறதாம். “பக்கத்து” மாநில திரைப்படங்களில் நடிக்க விருப்பம் காட்டுவதில்லையாம்.
ஏற்கனவே பல வெளிநாடுகளுக்குச் சென்று கட்டுமரம் போன்ற உடம்பை காட்டி சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் பல்ஸை பதம் பார்த்து வருகிறார். பட வாய்ப்புகள் வேறு அதிகமாக வருகிறதாம், அவரை யாரும் கையிலே பிடிக்க முடியாத படி ஆகாயத்தில் பறந்துக்கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசு கிசுக்க படுகின்றது.